Search This Blog

Showing posts with label Tamil best love kavithaigal. Show all posts
Showing posts with label Tamil best love kavithaigal. Show all posts

Wednesday, 1 July 2020

கைதி

சிறையில்லா கைதி நான்

அவள் கண்களாலே! 

சிறகிருந்தும் பறக்கவில்லை

ஆயுள் கைதியானேன்! 

 

என் குற்றம் காதலது

ஒருதலையாய் மட்டும்! 

அதற்கான தண்டனை தான்

ஒருவேளை உணவு மட்டும்! 

 

கல்லுடைக்கும் வேலையில்லை

காற்றில் கைநீட்டி திரிகிறேன்! 

தினம் அவள் வருகையை மட்டும்

கம்பியை போல என்னுகிறேன்! 

 

அவள் நினைவை மின் வேலியாய்

என்னை சுற்றிப் போட்டு வைத்தாள்! 

வேறு யாரும் வாராமல், உள்ளே

என்னை தனியாக பூட்டி வைத்தாள்! 

 

<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Monday, 29 June 2020

கட்டளை

பூக்களே இனி பூக்காதீர்கள்

அவள் துயில் நீங்கும் வரை! 

விடிந்ததும் வரும் திருடன் பனியே

இனி வராதே இது உன் பணியே! 

 

அடுக்காய் இலைவிரித்த அருகம்புல்லே

மேலும் உயர கட்டிட எழுப்பு, 

அவள் பாதம் அதில் பவனி வரும்

பட்டுப்புழுக்களை குடியமர்த்து! 

 

பசுவினை தினம் அழைத்து 

பாலாற்று மணலை பிழிந்தெடுத்து

பாலேடை அதில் கடைந்தெடுத்து

தினம் அவளிதழ்கள் பருக அனுப்பு! 

 

வானவில்லை வரவழைத்து

வெள்ளாவியில் வெளுத்தனுப்பு! 

கண்ணாடிகள் வெட்கப்படும்

அதன் புகைப்படங்களை எனக்கனுப்பு! 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Sunday, 28 June 2020

கூலி தருகிறேன்

       கூலி தருகிறேன்

 

தென்றலே அவள் மூச்சுக் காற்றை

மொத்தமாய் சேகரித்து என்னிடம் கொடு

ஓயாமல் திரியும் உனக்கு

ஓர் நாள் விடுப்பு தருகிறேன்

 

அவளைக் காணாது தினம் தேயும் நிலவே

என் கண்களை பார் அவளைக் கொண்டேன்

இனி தேய்ந்து நீயும் போகாதே

முப்பது நாளும் உனக்கு பௌர்ணமியே

 

பெரும் அலைத் திரைக்கடலே

பொங்காதே சற்று பொறுமை கொள்

புது மோட்சம் தர வந்துவிட்டாள்

இனி உன்னில் உப்பு சப்பில்லாமல் போகும்

 

குமுறும் எரிமலையே உன்மேல் நான்

ஈரத்துணியை போர்த்துகிறேன்

பனிமலையாய் உருகி உருமாறி

பள்ளம் மேட்டில் ஊர்ந்தோடேன்

Saturday, 27 June 2020

ஒரு நிமிடம்

         ஒரு நிமிடம்

 

அன்பே என் கண்களை கவனி

கண்ணாடியின் தேவையிருக்காது

என் இதயத்துடிப்பை உற்று நோக்கு

நொடிக்கு நூறு பெயரில் உன்னை அழைக்கிறது

 

கையை காற்றில் நீட்டி கேளேன்

என் மூச்சுக்காற்றின் சூட்டை கூறும்

வெறுங்காலில் மண்ணில் கோலமிட்டு பாரேன்

என் நரம்பின் அதிர்வுகள் புரியும்

 

தபால் பெட்டியிடம் கேட்டுப்பார்

முத்திரைக்கு கண் மையை கடனாய் கேட்கும்

உன்னையெழுதிய இலக்கண தாள்களை புரட்டிப்பார்

என்னி முடிக்க காற்றின் ஆயுள் குறைந்துபோகும்

 

என் கோரிக்கைகளை மனுக்களாய் எழுதி

ஆகாயத்தை உரையாய் மடித்தேன்

விடியும் முன்னமே படித்துவிடு

வெண் திருடன் வருவான் படித்ததும் எரித்துவிடு

 

 

கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..

 

 

எருக்கம் காதல்

     எருக்கம் காதல்

 

முத்துக்களாய் மூடி வைத்து

முதிர்ந்த பித்துக்களால் உடைத்த என்னை

காற்றாய் கரம் கொண்டு

இமயத்தை காண வைத்தது காதல்

 

கால் நோக திரிய வேண்டாம்

கனல் நீர் மேலே புரளவேண்டாம்

தரை மீது உன் தலைமுறையிருக்கு

தயங்காமல் மண் நெஞ்சில் மூடியது காதல்

 

மண்ணில் மறைந்த என்னை காணாது

விண்ணில் வீட்டை விட்டு வெளிவந்து

உள்ளே உறைந்த ஊமையென்னை

மெல்ல முளைய வைத்தது காதல்

 

ஆளாகி நின்றபோது

சொந்தங்கள் எல்லாம் தனிமரமாக

தனியாய் பூத்த என் சோலையிலே

வண்டொன்றின் ரீங்கார தாலாட்டு காதல் 

கோபம் கொள்ளாதே

              கோபம் கொள்ளாதே

 

 

பெண்ணே உன் கோபத்தை திரட்டி

கழுவில் என்னை ஏற்றாதே

வென்பனி போன்ற உன் வெள்ளைக்கருவில்

எரிமலைக் குழம்பை தெளிக்காதே

 

தென்றலுக்கு கோபம் என்ன புயலாய்

தென்னங்கீற்றைத் தாக்க

புனிதமாய் பருகும் நீர் துளிகளெல்லாம்

வெள்ளமாய் திரள்கிறதே என்னை மூழ்க

 

என் மூளை செய்த தவறுக்கெல்லாம்

கைவிரல் தோலை தண்டிக்கிறேன்

விரல்களையெல்லாம் வீரர்களாய் திரட்டி

என் மூளையை வம்புக்கிழுக்கிறேன்

 

அன்னிச்சையாக செய்த தவறுக்கு

நித்தமும் என்னில் வன்முறை

தவறுகளையெல்லாம் உன்னெதிரே நிறுத்தி

கேட்கிறேன், மன்னிப்பாயா இந்த ஓர் முறை 

இரங்கல் எழுத

இத்தனைக் காலம் என்னுடனே

என் சட்டைப் பையும் உன்னுடனே!

வரிகள் ஆயிரம் வடித்தாயே

தாளில் நளின நடனம் புரிந்தாயே!

 

அடக்குமுறை பழகிய என் கைவிரலோ

உனக்கு துரோகம் எழுதியது வரலாறு!

எனக்கெதிராய் போராட மனமில்லையா

பொருமையாய் கிடந்தது ஏன் கூறு!

 

உன் ஆயுல நான் தினம் சுரண்டி

சுயநலமாய் இருந்தேனே

கழுத்தை இறுக்கப்பிடித்து எழுதியபோதும்

உயிர் மூச்சை எனக்காய் தந்தாயே

 

அடக்கம் செய்ய அலைகிறேன்

வெட்டியானே ஓடி வா

உனக்கு இரங்கல் எழுத அலைகிறேன்

எனக்கு இன்னொரு பேனா கிடைக்குமா?

Thursday, 14 December 2017

என் ஜனனம்

ஓடாத நதியில் மீனாய் பிறந்தேன்
கூடாத கடலில் தான் சேர்ந்தேன்
தேனமுதை தெகட்ட உட்கொண்டு உறவாடி
கிழிந்த வலையில் சிக்கிக்கொண்டேன்
இளந்தென்றலை என்னுள்ளே இழுத்துவிட்டு
தரை மேல் தாண்டவம் நான் புரிந்தேன்
தங்க அளந்த தராசில் விலையாகி
உடைந்த கத்தியில் சிறு துண்டானேன்
உலையில் நானும் பலவாய் நீந்தி
செதிலிழந்து செதில் செதிலாய்
சட்டிக்குள்ளே மிதந்தேன்
சாவை நானும் வென்றேன்
அகப்பையில் மெல்ல படியெடுத்து
அவள் உள்ளங்கையில் கடைந்தெடுத்து
எனக்கு ஜனனம் தருகிறாள்
அவள் உள்ளத்தில் மோட்சம் காண்கிறேன்

யார்?

என் விலாவில் தோன்றிய பெண்ணே
உன் கண்களை செய்தவன் யார்?
உன் கழுத்துக்கு நூறு பவுன் செய்கிறேன்
வார்ப்பில்லாமல் உன்னை வார்த்தவன் யார்?

உன் மேனிக்கு தோதாக பட்டை நூற்கிறேன்
பட்டைவிட லேசாக உன் தேகம் நூற்றவன் யார்?
பல நூற்றாண்டு காணாத நுன் சிலையே
உன்னை செதுக்கிய உளியவன் யார்?

குயிலை விட மென்மையான உன் குரலை
பாட வைத்த இசை ஞானியவன் யார்?
ஆடும் மயிலது உன் காலடியில் வீழ்ந்தனவே
உன்னை ஆட்டுவித்த அந்த கலைஞன் யார்?

செந்தமிழ் நீ பேச சங்க நூல்களில் எல்லாம்
முடிச்சுகள் அறுந்ததே  உன் ஆசான் யார்?
அமுதங்களின் தன்னிலை சுவை குறைகிறதே
உன் இதழ் சுவையினை கடைந்தவன் யார்?

உணர்ந்தேன்

ஓவியத்தில் வாசம் உணர்ந்தேன்
உன்னை வரையும் முன்னே
காவியத்தில் இடம் பிடித்தேன்
உன்னில் என்னை இழந்த பின்னே

என் தேவைகளும் தேவையில்லை
உன்னை நான் தொடர்ந்தால்-இனி
காலங்களும் என் கையில் இல்லை
உன் கரங்களை தொழுதால்

சேமிக்க ஆசையுண்டு
உன் நினைவுகளலானால் மட்டும்
யுகங்கள் பல கடந்தாலும்
சுகமாய் உன்னை தொடர்ந்திடுவேன்

நிஜத்தில் நீ வெறுத்தாலும்
நினைவில் தினம் அனைத்திடுவேன்
நெருப்பாக பார்த்தாலும்
வெந்தாலும் உன்னோடு வந்திடுவேன்

என் செய்வேன்

மீன்கள் உன் கண்ணை கடனாய் கேட்கும்!
மான்கள் புருவத்தினால் பலியாக துடிக்கும்!
கருவிழியைக் காண அமாவாசை அடம்பிடிக்கும்!
வெண்திரையை காண பெளர்ணமி படம் பிடிக்கும்!

இதழ் மூடி சிரித்த நேரம் கண்ணக்குழியில் வீழ்ந்தேன்!
மெளனமான நேரம் மண்ணுக்கடியில் புதைந்தேன்!
இடையின் மடிப்பைக் கண்டு பட்டாடை தான் பனிந்து
உன் கை விரலின் தண்டனையை ஏற்றது

நீ சிந்திய புன்னகையில் பூக்களாய் பூத்துப்போனேன்!
பூக்காத காகிதப்பூ என்னை பூவென ஏற்றது!
நீ பேசிய வார்த்தைகள் ஒன்றாய் திரண்டு
புது மொழியென புத்தகம் வரைந்தது!

உன்னை புகழ்ந்து பாட்டெடுக்க
என் நாவை பலவாய் நான் கொய்தேன்!
சோகத்தில் உன்னை போற்றிடுவேன் சொர்கத்தின் வாசல் நீ!
சொப்பனத்தில் ஆடிவந்து சுகமாய் என்னை மீட்டெடு நீ!

ஆசைகள்

ஆசைகள் பேயாய் அலையுதடி
என் பேராண்மை உன்னிடத்தில் தோற்குதடி
பிரபஞ்சம் பொறாமையில் பார்க்குதடி
நீ பொழியும் புன்னகையில் வேர்க்குதடி

உன் நினைவுகளை மணியாய் கோர்த்தேனடி
மனம் மடமைகள் செய்தும் மடயனாய் ரசிக்குதடி
தனிமையெல்லாம் வலியால் நோகுதடி
காற்று என்னோடு மனம் விட்டு பேசுதடி

வண்டெல்லாம் என்னோடு கைகோர்த்து நடக்குதடி
நிதானமாய் வரவேண்டி என்னை கெஞ்சுதடி
நரம்பிற்க்கும் குருதிக்கும் சண்டையடி
சமாதானம் சொன்னால் வன்முறையை கூட்டுதடி

சங்கீதமெல்லாம் இசையாய் உன்னை ஏற்குதடி
சங்க இலக்கியங்கள் உன் பெயரை காட்டுதடி
மே மாத சாரல் என் மேல் தெறிக்குதடி
விரல்கள் உனக்காய் மேலும் கவியை படைக்குமடி

கொஞ்சம் பொறு

சிலந்தியே கொஞ்சம் பொறு
வேகமாய் நூற்காதே
பட்டுப்புழுவே சற்று வேகமெடு
கூட உனக்கு கூலி தரேன்
தூக்கணாங் குருவியே 
கூட்டை சீக்கிரம் நெய்து முடி
இரவு நேரத் தென்றலே
பனிக்காற்றை வாங்கி வா
சந்திரனே சீக்கிரம் வா
நீயின்றி அவள் உறங்கமாட்டாள்
அதிகாலை பூபாளமே
அவள் கணவில் நான் வருவேன்
அரைநாள் உனக்கு விடுப்பு தரேன்
அவள் துயிலெழும் வரையில் எழாதே!

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...