Search This Blog

Showing posts with label love quotes. Show all posts
Showing posts with label love quotes. Show all posts

Sunday, 28 June 2020

கூலி தருகிறேன்

       கூலி தருகிறேன்

 

தென்றலே அவள் மூச்சுக் காற்றை

மொத்தமாய் சேகரித்து என்னிடம் கொடு

ஓயாமல் திரியும் உனக்கு

ஓர் நாள் விடுப்பு தருகிறேன்

 

அவளைக் காணாது தினம் தேயும் நிலவே

என் கண்களை பார் அவளைக் கொண்டேன்

இனி தேய்ந்து நீயும் போகாதே

முப்பது நாளும் உனக்கு பௌர்ணமியே

 

பெரும் அலைத் திரைக்கடலே

பொங்காதே சற்று பொறுமை கொள்

புது மோட்சம் தர வந்துவிட்டாள்

இனி உன்னில் உப்பு சப்பில்லாமல் போகும்

 

குமுறும் எரிமலையே உன்மேல் நான்

ஈரத்துணியை போர்த்துகிறேன்

பனிமலையாய் உருகி உருமாறி

பள்ளம் மேட்டில் ஊர்ந்தோடேன்

Saturday, 27 June 2020

எருக்கம் காதல்

     எருக்கம் காதல்

 

முத்துக்களாய் மூடி வைத்து

முதிர்ந்த பித்துக்களால் உடைத்த என்னை

காற்றாய் கரம் கொண்டு

இமயத்தை காண வைத்தது காதல்

 

கால் நோக திரிய வேண்டாம்

கனல் நீர் மேலே புரளவேண்டாம்

தரை மீது உன் தலைமுறையிருக்கு

தயங்காமல் மண் நெஞ்சில் மூடியது காதல்

 

மண்ணில் மறைந்த என்னை காணாது

விண்ணில் வீட்டை விட்டு வெளிவந்து

உள்ளே உறைந்த ஊமையென்னை

மெல்ல முளைய வைத்தது காதல்

 

ஆளாகி நின்றபோது

சொந்தங்கள் எல்லாம் தனிமரமாக

தனியாய் பூத்த என் சோலையிலே

வண்டொன்றின் ரீங்கார தாலாட்டு காதல் 

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...