Search This Blog

Showing posts with label beat hikoo kavithaigal. Show all posts
Showing posts with label beat hikoo kavithaigal. Show all posts

Saturday, 27 June 2020

இரங்கல் எழுத

இத்தனைக் காலம் என்னுடனே

என் சட்டைப் பையும் உன்னுடனே!

வரிகள் ஆயிரம் வடித்தாயே

தாளில் நளின நடனம் புரிந்தாயே!

 

அடக்குமுறை பழகிய என் கைவிரலோ

உனக்கு துரோகம் எழுதியது வரலாறு!

எனக்கெதிராய் போராட மனமில்லையா

பொருமையாய் கிடந்தது ஏன் கூறு!

 

உன் ஆயுல நான் தினம் சுரண்டி

சுயநலமாய் இருந்தேனே

கழுத்தை இறுக்கப்பிடித்து எழுதியபோதும்

உயிர் மூச்சை எனக்காய் தந்தாயே

 

அடக்கம் செய்ய அலைகிறேன்

வெட்டியானே ஓடி வா

உனக்கு இரங்கல் எழுத அலைகிறேன்

எனக்கு இன்னொரு பேனா கிடைக்குமா?

Thursday, 14 December 2017

ஹைக்கூ

நானும் இலவுகாத்த கிளியானேன்
என்னை நீ நினைக்க மறந்தபொழுது

சிரிப்பினில் ஆயிரம் அர்த்தங்கள் அறிந்தேன்
என் அழுகையில் உன்னை மட்டுமே உணர்ந்தேன்

பட்ட மரத்திற்கு தண்ணீர் ஊற்றினேன்
இலையுள்ள மரங்கள் எல்லாம் எனக்கு இரங்கல் தெரிவித்தது

அரக்கு வைத்து பூட்டிய இதயத்தை
அழுத்திப்பிடிக்கிறேன் அவள் எதிரே வருகிறாள்

தினம் நூறுமுறை அவள் முன்னே நிற்கிறேன்
கணக்கு தெரியாதவளாய் கச்சிதமாய் நடிக்கிறாள்

பெண்ணே உனக்கு தற்காப்பு தேவையில்லை
உன் கண்களே போதுமடி

எங்களின் இடைவெளியே பலநூறு வருடம் பயணிக்கும்
நிலவே நீ எம்மாத்திரம்?

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...