என் விலாவில் தோன்றிய பெண்ணே
உன் கண்களை செய்தவன் யார்?
உன் கழுத்துக்கு நூறு பவுன் செய்கிறேன்
வார்ப்பில்லாமல் உன்னை வார்த்தவன் யார்?
உன் மேனிக்கு தோதாக பட்டை நூற்கிறேன்
பட்டைவிட லேசாக உன் தேகம் நூற்றவன் யார்?
பல நூற்றாண்டு காணாத நுன் சிலையே
உன்னை செதுக்கிய உளியவன் யார்?
குயிலை விட மென்மையான உன் குரலை
பாட வைத்த இசை ஞானியவன் யார்?
ஆடும் மயிலது உன் காலடியில் வீழ்ந்தனவே
உன்னை ஆட்டுவித்த அந்த கலைஞன் யார்?
செந்தமிழ் நீ பேச சங்க நூல்களில் எல்லாம்
முடிச்சுகள் அறுந்ததே உன் ஆசான் யார்?
அமுதங்களின் தன்னிலை சுவை குறைகிறதே
உன் இதழ் சுவையினை கடைந்தவன் யார்?
No comments:
Post a Comment