Search This Blog

Showing posts with label tamil love stories. Show all posts
Showing posts with label tamil love stories. Show all posts

Thursday, 14 December 2017

வேண்டும்

உன் கைபிடித்து நெடுந்தூரம் நடக்க வேண்டும்
நடக்கும் நேரமெல்லாம் நிதானமாய் கடக்க வேண்டும்
மேகம் நமக்கு குடைபிடிக்க வேண்டும்
இடி மின்னல்கள் இசைக் கச்சேரி நடத்த வேண்டும்

வானவில் வண்ணங்களை நம் மீது தூவ வேண்டும்
நிலா உன்னழகில் மண்ணில் வீழ்ந்து உடைய வேண்டும்
நட்சத்திரம் உன் பெண்மையில் ஒளிர வேண்டும்
சூரியன் உன் மென்மையை கண்டு குளிர வேண்டும்

காலையிலே பூத்த பூக்கள் நீயின்றி வாட வேண்டும்
கிரகங்கள் கிருக்குபிடித்து திசையொன்றாய் போக வேண்டும்
வின்னுக்கும் மண்ணுக்கும் போர் அறிவிக்க வேண்டும்
வில் அம்பு போதாமல் போர் முடிக்க வேண்டும்

உன் உள்ளங்கையில் சூரியனை மூட வேண்டும்
நீ கால் வைக்க பனி பூக்களாய் பூக்க வேண்டும்
அந்த பனிமேலே உன் கால்கள் பட வேண்டும்
உன் பாத சூட்டில் பனியோடு நானும் உருக வேண்டும்

எனக்கு நீ

உன் வெட்கங்கள் எனக்கு கவிதை
உன் சிரிப்புகள் எனக்கு புரியாத புதிர்
உன் மௌனங்கள் எனக்கு விடுகதை
உன் பார்வை நடுநிலை

உன் குரல் எந்தன் சங்கீதம்
உன் பேச்சு மனதை வருடும் பாடல்கள்
உன் உருவம் சிற்பியின் உளிபடாத சிலை
உன் நடை பூமிக்கு புது மோட்சம்

உன் விரல் நகங்களோ தண்டனை கைதிகள்
உன் பாதங்களோ பூக்களுக்கு பஞ்சு மெத்தை
உன் ஆரவாரம் என்னுள் பெருந்திரள் கூட்டம்
உன் பனிவோ பரவசத்திற்கு முற்றுப்புள்ளி

உன் பயணங்களோ இயற்கைக்கு ஓர் சவால்
உன் குறும்புகளோ குறுந்தகட்டிலும் நிறுத்த முடியாதவை
உன் உளரள்களோ தாய்மொழிக்கு புதுக்கவிதை
உன் பெயரோ தினம் பாடவேண்டிய திருப்புகழ்
உன் படைப்பே நான் ரசிக்கும் விசித்திரம்.

காதல்

             காதல் கடிகார முள்ளைப் போல
காதலியின் பின்னால் ஓட துடிக்கும்
அவள் கரம் பிடிக்க தவம் கிடக்கும்
என்னவளை காண இமை துடிக்கும்

கண்டதும் காணாததை போல் நடிக்க பழக்கும்
பல் முளையா மழலையாய் பெயரை உச்சரிக்கும்
தவறு செய்தால் அவள் கண்கள உன்னை எச்சரிக்கும்

சொந்தங்களை விட்டு கால்கள் தனியே நிற்கும்
சிறு அடிகள் பல வைத்து கால்கள் நடை பழக்கும்
அவளைக் காண கண்கள் தினம் தவமிறுக்கும்
பல இரவுகள் போர் மூண்டு விட்டுகொடுக்கும்

காலையில் எழுந்ததும் கொஞ்ச துடிக்கும்
எல்லை மீறி அது கெஞ்ச துடிக்கும்
இதழ் முத்தம் பல கேட்டு போர்தொடுக்கும்
ஓர் முத்தம் வென்று சரித்திரம் படைக்கும்.

என் செய்வேன்

மீன்கள் உன் கண்ணை கடனாய் கேட்கும்!
மான்கள் புருவத்தினால் பலியாக துடிக்கும்!
கருவிழியைக் காண அமாவாசை அடம்பிடிக்கும்!
வெண்திரையை காண பெளர்ணமி படம் பிடிக்கும்!

இதழ் மூடி சிரித்த நேரம் கண்ணக்குழியில் வீழ்ந்தேன்!
மெளனமான நேரம் மண்ணுக்கடியில் புதைந்தேன்!
இடையின் மடிப்பைக் கண்டு பட்டாடை தான் பனிந்து
உன் கை விரலின் தண்டனையை ஏற்றது

நீ சிந்திய புன்னகையில் பூக்களாய் பூத்துப்போனேன்!
பூக்காத காகிதப்பூ என்னை பூவென ஏற்றது!
நீ பேசிய வார்த்தைகள் ஒன்றாய் திரண்டு
புது மொழியென புத்தகம் வரைந்தது!

உன்னை புகழ்ந்து பாட்டெடுக்க
என் நாவை பலவாய் நான் கொய்தேன்!
சோகத்தில் உன்னை போற்றிடுவேன் சொர்கத்தின் வாசல் நீ!
சொப்பனத்தில் ஆடிவந்து சுகமாய் என்னை மீட்டெடு நீ!

ஆசைகள்

ஆசைகள் பேயாய் அலையுதடி
என் பேராண்மை உன்னிடத்தில் தோற்குதடி
பிரபஞ்சம் பொறாமையில் பார்க்குதடி
நீ பொழியும் புன்னகையில் வேர்க்குதடி

உன் நினைவுகளை மணியாய் கோர்த்தேனடி
மனம் மடமைகள் செய்தும் மடயனாய் ரசிக்குதடி
தனிமையெல்லாம் வலியால் நோகுதடி
காற்று என்னோடு மனம் விட்டு பேசுதடி

வண்டெல்லாம் என்னோடு கைகோர்த்து நடக்குதடி
நிதானமாய் வரவேண்டி என்னை கெஞ்சுதடி
நரம்பிற்க்கும் குருதிக்கும் சண்டையடி
சமாதானம் சொன்னால் வன்முறையை கூட்டுதடி

சங்கீதமெல்லாம் இசையாய் உன்னை ஏற்குதடி
சங்க இலக்கியங்கள் உன் பெயரை காட்டுதடி
மே மாத சாரல் என் மேல் தெறிக்குதடி
விரல்கள் உனக்காய் மேலும் கவியை படைக்குமடி

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...