Search This Blog

Showing posts with label tamil kavithaigal. Show all posts
Showing posts with label tamil kavithaigal. Show all posts

Thursday, 14 December 2017

யார்?

என் விலாவில் தோன்றிய பெண்ணே
உன் கண்களை செய்தவன் யார்?
உன் கழுத்துக்கு நூறு பவுன் செய்கிறேன்
வார்ப்பில்லாமல் உன்னை வார்த்தவன் யார்?

உன் மேனிக்கு தோதாக பட்டை நூற்கிறேன்
பட்டைவிட லேசாக உன் தேகம் நூற்றவன் யார்?
பல நூற்றாண்டு காணாத நுன் சிலையே
உன்னை செதுக்கிய உளியவன் யார்?

குயிலை விட மென்மையான உன் குரலை
பாட வைத்த இசை ஞானியவன் யார்?
ஆடும் மயிலது உன் காலடியில் வீழ்ந்தனவே
உன்னை ஆட்டுவித்த அந்த கலைஞன் யார்?

செந்தமிழ் நீ பேச சங்க நூல்களில் எல்லாம்
முடிச்சுகள் அறுந்ததே  உன் ஆசான் யார்?
அமுதங்களின் தன்னிலை சுவை குறைகிறதே
உன் இதழ் சுவையினை கடைந்தவன் யார்?

உணர்ந்தேன்

ஓவியத்தில் வாசம் உணர்ந்தேன்
உன்னை வரையும் முன்னே
காவியத்தில் இடம் பிடித்தேன்
உன்னில் என்னை இழந்த பின்னே

என் தேவைகளும் தேவையில்லை
உன்னை நான் தொடர்ந்தால்-இனி
காலங்களும் என் கையில் இல்லை
உன் கரங்களை தொழுதால்

சேமிக்க ஆசையுண்டு
உன் நினைவுகளலானால் மட்டும்
யுகங்கள் பல கடந்தாலும்
சுகமாய் உன்னை தொடர்ந்திடுவேன்

நிஜத்தில் நீ வெறுத்தாலும்
நினைவில் தினம் அனைத்திடுவேன்
நெருப்பாக பார்த்தாலும்
வெந்தாலும் உன்னோடு வந்திடுவேன்

ஆசைகள்

ஆசைகள் பேயாய் அலையுதடி
என் பேராண்மை உன்னிடத்தில் தோற்குதடி
பிரபஞ்சம் பொறாமையில் பார்க்குதடி
நீ பொழியும் புன்னகையில் வேர்க்குதடி

உன் நினைவுகளை மணியாய் கோர்த்தேனடி
மனம் மடமைகள் செய்தும் மடயனாய் ரசிக்குதடி
தனிமையெல்லாம் வலியால் நோகுதடி
காற்று என்னோடு மனம் விட்டு பேசுதடி

வண்டெல்லாம் என்னோடு கைகோர்த்து நடக்குதடி
நிதானமாய் வரவேண்டி என்னை கெஞ்சுதடி
நரம்பிற்க்கும் குருதிக்கும் சண்டையடி
சமாதானம் சொன்னால் வன்முறையை கூட்டுதடி

சங்கீதமெல்லாம் இசையாய் உன்னை ஏற்குதடி
சங்க இலக்கியங்கள் உன் பெயரை காட்டுதடி
மே மாத சாரல் என் மேல் தெறிக்குதடி
விரல்கள் உனக்காய் மேலும் கவியை படைக்குமடி

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...