Search This Blog

Monday, 3 August 2020

பகலிரவு

          பகலிரவு

 

பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை

தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு?

அரைநாள் கூடத் தாங்கவில்லை

இப்படி உங்களில் யுத்தமெதற்க்கு?

 

கதிர் கொண்ட பகலவனே

மதிகொண்ட அவளை கடிந்துகொண்டதேன்?

பெரும் மடிகொண்ட கதிரவளே

அவனை கண்டதும் வெட்கங்களை விலக்குவதேன்?

 

உங்களாட்சியில் மாந்தர்கள் கோடி

அவர்களை உங்கள் வசப்படுத்துங்கள்

இருவரும் ஓர் நாள் ஒன்றாய் பேசி

மீண்டும் மனம் திரும்புங்கள்

 

இரவோ பகலோ முடிவுகட்டி

இன்னும் முழுதாய் வாழுங்கள்

முட்டி மோதி காதலை தொடர்ந்தால்

வாழ உங்களை மேலும் நெறிபடுத்துங்கள்

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...