Search This Blog

Saturday, 27 June 2020

பெண்

                 பெண்

 

காற்றையே மூச்சில் கைது செய்வாள்

ஆணில் அமைதியாய் துயில்கொள்வாள்

படிக்க முடியா காவியமாவள்

கண்ணிலே கதை சொல்வாள்

 

புதிருக்கு முன்னே நின்று, புன்னகையில்

புதிர் போடும் முதிர்ந்த கன்னியவள்

மார்புச் சூட்டிலே ஆணை துடிக்க துடிக்க

சித்திரவதை செய்யும் புனித அரக்கியவள்

 

ஆநிரைகள் ஆயிரம் வந்தாலும்

ஓர் ஆணின் நிரை காணும் நெஞ்சமவள்

கர்வத்தை கட்டிலில் கழட்டிவிட்டு,ஆணை

நிராயுதமாய் வெல்லும் வித்தைக்காரியவள்

 

கட்டில், தொட்டில் பிள்ளைகளை

தினம் தாலாட்டி பாடும் தாயவள்

மகளாய் மண்ணில் மீண்டும் பிறந்து

தந்தைக்கு இரண்டாம் தாயான மழலையவள்

 

 

கோ.நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர்

 

 

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...