Search This Blog

Friday, 3 July 2020

பெண்மையில்

நெஞ்சதனை கருவரையாய் சுமக்கும்

ஆணெல்லாம் பெண்ணாகிறான்

ஆண்மையினை தோற்கடிக்கும்

பெண்ணெல்லாம் ஆணாகிறாள்

 

களவு பரம்பரை தொழிலாக்கி

கனம் என்னை களவாடினாள்

பட்டினியாய் எனை போட்டு

என் தாபத்தை விருந்தாக்கினாள்

 

தொடர்கதையாய் அவள் நினைவை

தினம் என்னில் பழக்கினாள்

தொடரும் என சொல்விடுத்து

முடியாத் தொடராய் கதை நீட்டினாள்

 

செக்கு மாட்டு கணக்காக

என்னை தினம் சுழட்டினாள்

சாட்டையிலே அடித்துவிட்டு

என் தலையை கோதினாள்.


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...