Search This Blog

Thursday, 9 July 2020

பிளாஸ்டிக் குப்பைகள்

       பிளாஸ்டிக் குப்பைகள்

 

அரசாங்கம் வேண்டாமென்றும்

கள்ளத்தனமாய் நான் பிறந்தேன்

கருனையில்லா கடைக்காரர்களாலே

குழந்தை தொழிலாளியாய் பொதி சுமந்தேன்

 

மெல்லிய என் தேகம் கிழித்து

விலைமாதைப் போல் வீசப்பட்டேன்

காற்றும் என்னை கருனையின்றி அடிக்க

பல மயில்கள் துரத்தப்பட்டேன்

 

நேற்று விழுந்த மழைத்துளியை

என் மேலே தாங்கிக்கொண்டேன்

புதிதாய் வந்த நட்டுறவின்

காதலை நான் ஏந்திக்கொண்டேன்

 

பிய்ந்த குச்சித் தலையன் என்னை

தரையோடு அள்ளிக்கொண்டான்

தொட்டியிலே என்னைக் கொட்டி

உறவுகளை குப்பையாய் என்னுடன் சேர்த்தான் 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...