Search This Blog

Saturday, 27 June 2020

உப்பாய்?

வங்கக்கடலே நீ நீண்ட நாள் அழுதாயா?
கண்ணீரை போல் உன் தண்ணீரும் உப்பாக!
யாரிடம் நீ காதல் சொன்னாய்?
உன் கதையை எனக்கு சொல்லேன்!

முத்து அவள் சிரிப்பில் வீழ்ந்து
உன் சிந்தையினை இழந்தாயா?
பவளமவள மூடிய இதழ் பிளக்க
பட்டென காதலில் வீழ்ந்தாயா?

காகிதக் கப்பலதை மார் மேலே விட்டாயா?
அசைந்த நளினமதில் காதல் நீ கொண்டாயா!
இல்லை, கவிழாமல் கரை சேர்த்து
அவள் பிரிவை நீயும் உணர்ந்தாயா?

மீன்களிலே அழகியொன்றை
ஒருதலையாய் வென்றாயா?
கைகூடும் நேரமதில் கயவர்கள்
கரைக்கு கடத்தி சென்றாரா? 

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...