முதல் முறை உன்னை கண்டபோது
பார்வையில் என்னை அறைந்துவிட்டாய்
சிவந்த கண்ணங்களை மூடிக்கொண்டேன்
சிரிப்பால் அதற்கு மருந்திட்டாய்
என் எதிரே நீ வருகையிலே
இதயத்தின் திசையை திருப்பிவிட்டாய்
என்னை கடந்து செல்லும் வரை
துடிப்பையும் சேர்த்து நிறுத்திவிட்டாய்
நீ நெளிந்து நடந்து போகையிலே
அன்னத்தையே மிஞ்சிவிட்டாய்
எனக்கு, அன்னம் தண்ணியும் இறங்கவில்லை
எங்கே நீ நடை பழகிக்கொண்டாய்
கால் கொலுசின் ஓசையிலே
மயிலை நீ ஆடவிட்டாய்
மெளனச் சிரிப்பின் ஜதியினிலே
மனதை ஏனடி கொள்ளையிட்டாய்?
No comments:
Post a Comment