சாலையோர பூக்கள்
ஒதுக்கி வைத்த பூஞ்சோலையவள்
வாகனங்கள் சென்றால் தலையாட்டுபவள்
வான் மழையை எதிர்பார்ப்பவள்
ஓர் ரசிகனையும் காணதவள்
யார் கூந்தலுக்கும் ஏங்காதவள்
களை எடுக்காத கூட்டத்தவள்
வான் பறக்கும் வண்டுகளை
தினம் வாடிக்கையாளராக கொண்டவள்
வேருக்கு நீர் குறைந்தாலும்
பூவின் வண்ணத்தில் கஞ்சம் காட்டாதவள்
எந்த அரசியல் தலைனின் தோளிலும்
சேரா தனிக்காட்டு தலைவனவள்
கிழவியின் கைப் பின்னல்களுக்கு
அடங்க மறுத்த மெண் போராளியவன்
தாய் வீட்டோடு வாழ்ந்து முடித்து
தன் ஜென்மம் முடித்த கன்னியவள்
No comments:
Post a Comment