பட்ட மரம்
பிறந்து வளர்ந்த இடத்தில்
வாழ்ந்து முடித்த சோம்பேறியவன்
நிழலினை நீண்ட தூரம்
பயணம் அனுப்பா சுயநலவாதியவன்
பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த
பாரியவன்
காய்ந்துப்போன ஒரேயொரு
சோலையவன்
ஒற்றைக்காலில் துயில் கொண்ட
கும்பகர்ணன்
கடைசிவரை தன் காதலியை, காட்டாத
பாவியவன்
வின் மேலே துள்ளி எழும்பாத
அமரனவன்
மண் மேலே அமைதியாய் அடக்கமான
தவப்புதல்வன்
No comments:
Post a Comment