கிழிந்த நோட்டே
கொஞ்சம் பொறு
சிரித்துவிட்டு வருகிறேன் செல்லாக்காசே!
சாதாரண காகிதம் உன்னை
நாதர் முடிமேல் வைத்தானே!
உள்ளங்கையில் உன்னை வைத்து
உலகை விலைபேசினானே!
ஏழையவன் கைபட
கூசாமல் முகம் சுழித்தாயே!
சரிபாதி கிழிந்த உன்னை
ஒரு பாதியும் ஏற்கவில்லையா!
உனக்கும் வயதாகியதே
ஒருநாளும் உணர்ந்தாயா!
உனை ஒட்டு போட்டு விக்கிறேன்
எப்படியாவது கை மாறு!
இன்றைய பொழுது உன்னை நம்பி
எனக்கு செய்வாயா கைமாறு!
No comments:
Post a Comment