Search This Blog

Saturday, 27 June 2020

வாய்க்கால் நீர்

        வாய்க்கால் நீர்

 

வளைந்து ஓடும் வாய்க்காலே

வேகமாய் எங்கே ஓடுகிறாய்

தங்க பதக்கம் ஆசையாலேவா

ஓடி உன்னை தயார் செய்கிறாய்?

 

அழையா விருந்தாளியாய்

நண்டு வீட்டில் நிரம்புகிறாய்

வழியில் யார் அழைத்தாலும்

வலம் இடமாய் திரும்புகிறாய்

 

குறுக்கே யார் தடுத்தாலும்

குருட்டுத்தனமாய் அடிக்கிறாய்

மந்தை உன்னை குடித்தாலும்

குறையாமல் கொடுக்கிறாய்

 

ஓடியோடி கால்கள் வலிக்கிறதோ

கழனியிலே தங்கிவிட்டாய்

தங்க பதக்க கணவதனை நீ மாண்டு

உழவனுக்கே கொடுத்துவிட்டாய்

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...