நினைவுகளே தாக்காதே!
கண்ணில்
பத்து விரலை பாய்ச்சாதே
தனிமையிலே பேசாதே!
தனியாய்
தவிக்கவிட்டுப் போகாதே
என் இளஞ்சூட்டு ரத்தமதை
செடி வேர்களில் ஊற்றாதே
காயம் பட்டு கருகி விடும்
கருனையை எதிர்பார்க்காதே
வலியதனை சொல்லி அழ
வார்த்தைகளே போதாது
வானம் போல கண்ணீர் விட்டேன்
வாய்க்கால் கரையும் தீராது
தேசம் தாண்டி பாசம் வைக்க
தூரம் என்ன தடையாகுமா?
நீ என்னை விட்டு விலகியிருந்தால்
உன் மேல் என் காதல் குறையுமா?
<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
No comments:
Post a Comment