மின்மினிகள் வெளிச்சத்தில் வெள்ளை பளிங்கு, என் தாஜ்மஹால் நீ!
மதில் அதில் தங்கும் பறவைகள் ஆயிரம்,
உன் மனதருகே வட்டமிட்டேன் நான்!
கோடிமுறை வான் நோக்கியபோதும்,
என் உலகம் உன்னை சுற்றியே!
கடவுச்சீட்டில்லாமல் சுற்றுலா வந்தேன்,
காலத்துக்கும் உன்னிடம் குடியுரிமை கேட்கிறேன்!
பார்வையாளர்கள் தினம் ஆயிரம் வந்தாலும்,
உன் பாதங்களை ஏந்தும் ரசிகனாய் காலம் நகர்கிறேன்!
உன் தோட்டத்தில் செடியாகி,
உன் கூந்தலை என் வாசத்தால் அலங்கரிக்கிறேன்!
நெடுநாள் உன்னை ரசித்தபடியாய்,
நெருக்கங்களில் உன்னை கொஞ்சுகிறேன்!
தீராத காதல் கொண்டு உன் மீது, ஓயாமல் போர் தொடுக்கிறேன்!
உன் கை விரல் ரேகை நோகாமல்
நான் உன் கைப்பிடிக்கிறேன்!
உன்னை என் மார்போடு தலைச்சாய்த்து,
காதோடு கவி பாடவா!
உன் நேர்த்தியான நுனி மூக்கில்,
என் இமைகளை தூரிகையாய் உரசவா!
காலங்களில் அழியா காதல் காவியம் ஒன்றை,
உன் மெளன மொழியில் படைக்கவா!
என் காதல் நீ,
உன் பார்வை நான்!
என் ஆதி நீ,
உன் அந்தாதி வரை நான்!
This is G. Naveenkumar M.A., B.Ed., M.Phil., (PhD) I post all my poems and short stories...
Search This Blog
Saturday, 27 June 2020
என் காதலி
Subscribe to:
Post Comments (Atom)
பகலிரவு
பகலிரவு பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...
-
நிலவுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல்கள் இருக்கும், நிலவொளி மட்டுமே என்னோடு பரவாயில்லை நான் உயிருடன் நடமாடிக்கொண்டிருப்பேன்... காலம் இப்படிய...
-
பகலிரவு பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...
-
இத்தனைக் காலம் என்னுடனே என் சட்டைப் பையும் உன்னுடனே! வரிகள் ஆயிரம் வடித்தாயே தாளில் நளின நடனம் புரிந்தாயே! அடக்குமுறை பழகிய என் கைவிரலோ உன...
No comments:
Post a Comment