மழலை நாவினில் சோழியாய் சுழன்றி நாதங்களாய் எழும் மூத்த மொழி என்தமிழே
நீ அகமாய் இருந்து தொல்காப்பியன் உறுவருள ஆயர்குடியை அசைத்ததென்னவோ!
ஏழு சீரடியில் வான்புகழை வள்ளுவனுக்கு தந்த உன் இலக்கியவள கூற்றென்னவோ!
வழக்கொழிந்த மொழிகளெல்லாம் வக்கற்று வாழ துடிக்கும்போது
நாலாயிரம் ஆண்டுகளாய் தன்னை தகவமைத்து வாழும் உன்னை செந்தமிழ் எனக்கூற தேகம் சிலிர்க்காதோ
ஆயிரமாயிரம் மொழிகளுக்கெல்லாம் கிளைமொழி உண்டு
இவ்வுலகினில் உனக்கு மட்டுமே தாய் என்ற கெளரவம் உண்டு
இரந்துண்டு வாழா மொழிகளில் தன்னகத்தே புதுவார்த்தை படைக்கும் புரட்சி நீ!
இன்னும் நூராயிரம் வருடம் நீ நிலையாய் இருப்பாய் உயர்தனிச் செம்மொழியாய்!
செந்தமிழ் காப்போம்! செந்தமிழ் காப்போம்!
This is G. Naveenkumar M.A., B.Ed., M.Phil., (PhD) I post all my poems and short stories...
Search This Blog
Friday, 8 February 2019
செந்தமிழ் காப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
பகலிரவு
பகலிரவு பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...
-
பகலிரவு பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...
-
நிலவுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல்கள் இருக்கும், நிலவொளி மட்டுமே என்னோடு பரவாயில்லை நான் உயிருடன் நடமாடிக்கொண்டிருப்பேன்... காலம் இப்படிய...
-
பூக்களே இனி பூக்காதீர்கள் அவள் துயில் நீங்கும் வரை! விடிந்ததும் வரும் திருடன் பனியே இனி வராதே இது உன் பணியே! அடுக்காய் இலைவிரித்த அருகம்...
No comments:
Post a Comment