Search This Blog

Wednesday, 21 March 2018

எங்கே போனாய்?

           எங்கே போனாய்?
ஒன்டிக் கட்டையா நிக்குறேன்டி
தனியே விட்டு எங்கே போனே?
என்னை ஊற்றி எரிக்கிறேன்டி
உசுரே எனக்கு முன்னே ஏன் போனே?
திக்கு தெரியா நிக்குறேனே
நீ செதஞ்ச இடம் நான் அறியேன்
பித்துபுடிச்சு நான் அலைய
பிறைநிலா தேடிப் போனாயோ!
அன்னம் தண்ணி எறங்கவில்லை
தினம் ஆகாயத்தை நான் பாக்குறேன்
அறைகுறையா நான் தூங்கி
அர்த்த ராத்திரியில் கண் முழிக்கிறேன்
செல்லக் குட்டி பூனையப்போல்
என்னை தினம் சுத்தி வந்தே
நான் தெனம் சுத்தி சுத்தி அலையுரேனே
செல்லமே நீ எங்கே போனே?

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...