நீ பேசாத நாட்கள்
ஓர் இரவு நீ பேசவில்லை
பூச்சி புழுவை கூட்டி ஒப்பாரி வைத்தேன்
கண்ணில் ததும்ப ததும்ப நீர் ஒழுக
மொத்தமாய் காவிரிக்கு திருப்பிவிட்டேன்
என் தோள்மீது சாய்வேன் என்று
சொன்னதெல்லாம் பொய்யோ என்றேன்
மாமா உன தோள் மீது
சாஞ்சிக்கிறேன்னு மறுநாள் வந்தியே
தீப்பந்தம் நான் கொளுத்தி உனக்காக காத்திருக்க
மனசக்குள்ளே கதவ தட்டும் சத்தம்
யாருன்னு எட்டி பார்க்க
இதயத்தோடு பேசலான்னு என்னை கூட்டி போனியே
இரவு முழுக்க நாம் பேச
எழுத்து காலி ஆகுமுன்னு
கலியுலக காலத்திலும் எனக்கு
கடிதம் எழுதி போட்டாயே
பல இரவு போயிடுச்சி
இன்னும் நாமும் பேசவில்லை
ஒப்பாரி வைக்க ஆளில்லை
சகியே, தனியே நான் என்ன செய்ய?
No comments:
Post a Comment