Search This Blog

Friday, 2 March 2018

அழைப்பிதழ்

கோவிலின் உள்ளே அவளிருக்க,மணியோசை
எனக்கு அழைப்பிதழ் அனுப்பியது
தட்சனை இல்லாத பக்தனாய்
அவள் பின்னால் உலா சென்றேன்

அவளின் ஓவ்வொரு பார்வையிலும்
கோபுரத் தூண்கள் வலுப்பெற்றன
அவள் உற்றுப் பார்த்த சிலைகளோ
நானி குணிந்து கண்களை மூடிக்கொண்டது

தேவாரப் பாடல்களோ வரிமாறி
இவள் புகழைப் பாடியது
அவள் கை கூப்பி கடவுளை வணங்க
சிவனவன் தரிசனம் பெற்றான்

அவள் உடுத்தியிருந்த பட்டோ
பார்வதியை பின்னுக்கு தள்ளியது
இதனால் முக்கண்ணுடைய சிவனுக்கும்
எனக்கும் முக்தி போர் மூண்டது

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...