எனக்கு முன்
என் உயிரை காற்றாய் திரித்து
உன் முகவரியை தேடினேனே
தென்றல் முன்னே முந்தியபடி
புயல் என்னை பின்னே தள்ளுறானே
சங்கிலியால் விளங்கு பூட்டி
திருவிழா தேராக வாரேனே
என் முன்னே சாமி முந்தி
உன்னை கைகூப்பி தொழுதானே
உன் கண்ணத்தில் நான் சேர
நீரில் தூறலாய் சேர்ந்தேனே
என்னை வாளியிலே மொண்டெடுத்து
வாசலில் நீ தெளிக்க உயிரின்றி வீழ்ந்தேனே
கோவில் புறா காலிலெல்லாம்
காதல் கடிதம் வரைந்தேனே
வழிப்பறியாய் அவைகள் மாறி
கடிதம் திருட வியந்தேனே
No comments:
Post a Comment