என் மனதில் புதிதாய் கட்டிய பாலம் நீ
உன் நினைவு வந்தால் உடைகிறேன்
நினைப்பு வரவில்லையெனில் உடைத்து
மீண்டும் அதை நானே புதுப்பிக்கிறேன்
இளங்காற்றிலே பஞ்சைப் போல பறக்கிறேன்
உன் உள்ளங்கையில் படுவேனா
நீ ஊதும் மூச்சுக்காற்றில் மேலே பறந்து
ஆகாயத்தில் நூறு முறை பிறப்பேனா
உறையில் வைக்க நேரமில்லாமல்
தனிமை என்னோடு வாள் பிடித்ததே
உன் விழியசைவில் தான் அது நொறுங்கி
என் இதயத்தை உரையாக்கியதே
உன் நெடுந்தூர காலடிப் பயணத்தில்
என் பாதம் துறவியாய் போகுது
சுங்கவரி கேட்டாலும் என் வரியை தருகிறேன்
உன் உள்ளங்கையில் என் பெயரெழுதடி பெண்ணே
No comments:
Post a Comment