Search This Blog

Sunday, 7 January 2018

காணல் நீராய்

நீ என்னைவிட்டு விலகிச் சென்ற நேரம்
உச்சி வெயிலில் தனிமையில் நடந்தேன்
காணல் நீரை காலால் எட்டி உதைத்தேன்
சிறுகல்லை அதில் போட்டு ஆழம் கண்டேன்

மீன் குஞ்சுகளை நீந்த பழக்கினேன்
அல்லி மலரை அதிலிட்டு அழகு பார்த்தேன்
காணல் நீர் கரைபுரலா வண்ணம்
மரம் செடிகளை பலவாய் நட்டேன்

நட்ட மரமோ நெடுந்தோள் வரை வளர்ந்திருக்க
குருவிகளோ தொங்கும் கூட்டை நெய்தது
அந்தி சாய்கையில் யார் கண்பட்டதோ
அத்தனை நீரும் வற்றிவிட்டது

மீனும் நானும் தரை மேல் துடித்தோம்
மரமும் குருவியும் அடியோடு சாய்ந்தது
மடைபோட்டு உன்னை கட்டி காத்தும்
சொட்டும் மிச்சமின்றி உன்னை உறிந்தவன் யார்?

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...