ஜாமத்தில் விழிக்கிறேன் -உன்
நினைவு வந்தால் சிரிக்கிறேன்
சோகத்தில் வீழ்கிறேன்
சாகவில்லை மீள்கிறேன்
தலையாட்டி பொம்மையில்லை-நான்
தானாய் அசைகிறேன்
வேடிக்கை பார்க்கிறேன் என்னுள்
விருந்திரனாய் நீ வந்தால்
சக்ரமாய் சுழன்றபோதும்-இங்கே
என்னில் மயக்கமில்லை
பார்வையிலே நீ அடித்த போது
சத்தியமாய் நான் எந்திரிக்கவில்லை
சுடுபட்ட களிமண்ணாயினும்-உன்
சுய உருவம் நான் வடிப்பேன்
சுழலாமல் இப்பூமியிருந்தால்
உன்னைக் காட்டி சுழலவைப்பேன்.
No comments:
Post a Comment