Search This Blog

Saturday, 21 April 2018

நான் வரைந்த திமிர்

  நான் வரைந்த திமிர்

தூயப் பசும்பாலிலே தூரிகைக் கொண்டு
இமைக்காமல் உன் கண்களை செய்தேன்
கருமேகங்களை சுண்டக் காய்ச்சி
உன் விழிகளுக்கு கருமை தந்தேன்

வானவில்லை கசக்கி பிழிந்து
பல வண்ண ஆடை தைத்தேன்
மண் மலைகளெல்லாம் குடைந்தெடுத்து
தங்கத் தோடை கையில் கொண்டேன்

புன்னகையிலே புது பூக்கள் சேர்த்து
புதுச்செடியாய் நெஞ்சில் நட்டு வைத்தேன்
பூத்த நேரம் தட்டான் பூச்சி வர
ஓடியோடி அதை விரட்டிவிட்டேன்

காளை திமிலைப்போல் உன் திமிரையெல்லாம்
எனக்குள்ளே கொட்டி குவித்து வைத்தேன்
அன்பாலே அடக்க என்னி அந்தரத்தில் வீழ்ந்துவிட்டேன்
திமிர் பிடித்த அழகின் அழகியோ நீ?

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...